சில நாட்களுக்கு முன் சகோ. Karnamallar P அவர்கள் பாவாணர் தொடர்பாக ஒரு பதிவு
செய்திருந்தார். அதற்க்கு பின்னூட்டம் எழுதிய நன்பர் Mani Pari அவர்கள் மருத நிலம் என்ற ஒரு திணை அக்காலத்தில் இல்லை என குறிப்பிடுகிறார். மேலும் மள்ளர் என்ற சொல்
பள்ளர்களை குறிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அதற்க்கு சான்றாக சூடாமணி
நிகண்டில் ஒரு பாடலை குறிப்பிட்டு எழுதி இருந்தார். அப்பதிவை பார்த்த சிலர்
இவ்வளவு நாட்களாக மள்ளர் என்ற சொல் பள்ளர்களை குறிக்கிறது என நாம் ஏமாற்றி வந்ததாக
நம்மீது குறை கூறியுள்ளனர்.
சூடாமணி நிகண்டு அக்காலத்தில் வாழ்ந்த மக்களை
குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல்,
பாலை என்ற திணையின் அடிப்படையில் குறிப்பிடுகிறது. அதாவது மருதநிலத்தில்
வாழ்ந்த மக்களை மள்ளர், தொழுவர், களமர்,
உழவர் என குறிப்பிடுகிறது. அதற்க்கு மாறாக மருத நிலம் என்ற ஒரு திணை அக்காலத்தில் இல்லை என குறிப்பிடும் மணிபாரி
அவர்கள், சூடாமணி நிகண்டில் உள்ள இப் பாடலை மட்டும் எவ்வாறு
ஏற்றுக்கொள்கிறார் என புரியவில்லை.
நாம் முதலில் சூடாமணி நிகண்டைப் பற்றி
தெரிந்துகொண்டு பின்பு அப்பாடலுக்கான பொருளை தெரிந்துகொள்ளலாம். கி.பி. 16 – ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நிகண்டு பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அது பின்வறுமாறு.
முதலாவது
- தேவப் பெயர்த் தொகுதி.
இரண்டாவது
- மக்கட் பெயர்த் தொகுதி.
மூன்றுவது
- விலங்கின் பெயர்த்
தொகுதி.
நான்காவது
- மரப் பெயர்த் தொகுதி.
ஐந்தாவது
- இடப் பெயர்த் தொகுதி.
ஆறாவது
- பல்பொருட் பெயர்த்
தொகுதி.
ஏழாவது
- செயற்கை
வடிவப் பெயர்த் தொகுதி
எட்டாவது
- பண்பு பற்றிய பெயர்த்
தொகுதி.
ஒன்பதாவது
- செயல் பற்றிய பெயர்த்
தொகுதி
பத்தாவது
- ஒலி பற்றிய பெயர்த்
தொகுதி
பதினொராவது - ஒரு
சொற்பல் பொருட் பெயர்த் தொகுதி
பன்னிரண்டாவது- பல்பெயர்க் கூட்டத் தொரு
பெயர்த் தொகுதி, என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
திரு. மணிபாரி அவர்கள் குறிப்பிட்டுள்ள பாடல் சூடாமணி நிகண்டு பதினொராவது - ஒரு சொற் பல் பொருட் பெயர் தொகுதி (ளகரவெதுகை)
என்ற தலைப்பில், அதாவது ஒரு சொல்லுக்கு பல
பொருள் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட பாடல் அது.
அப்பாடல் வரி:
பிள்ளை(ம)யேவடுகன் காக்கை பெட்டறான் விரும்பல் வேண்டல்
மள்ளரே மள்ளர் வீரர் மறவர்க்குங்
குறவர்க்கும் பேர்
உள்ளமே
முயற்சி நெஞ்சா முஞற்றிழுக் கொடுதாளாண்மை
வள்ளியே
வல்லி செங்கை வளைபுனையிழை முப்பேரே. (கo)
( சூடாமணி நிகண்டு - ஒரு சொற் பல் பொருட் பெயர் தொகுதி)
இப்பாடலுக்கு உரை எழுதிய ஆசிரியர்
கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளை - வைரவிக்கடவுள், காக்கை.
பெட்டல் - விரும்பல், வேட்கைப்பெருக்கம்.
மள்ளர் - உழவர், படைவீரர், திண்ணியர், குறிஞ்சிநிலமாக்கள்.
உள்ளம் - முயற்சி, மனம்.
உஞற்று - இழுக்கு, முயற்சி.
வள்ளி - படர்கொடி, கைவளை, ஆபரணம்.
அப்பாடலுக்கான பொருள் திரு. மணிபாரி
அவர்களுக்கு புரியவில்லையா? அல்லது புரியாதமாதிரி
நடிக்கிறாரா? என்பதை அவர்தான் கூறவேண்டும். மேலும் சூடாமணி
நிகண்டு மருத நிலம் இருந்தது என்றும் அந்த மருத
நிலத்தில் வேந்தன், புரந்தரன் இருந்தான் என்றும் குறிப்பிடுவது தங்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது.
சூடாமணி நிகண்டு - முதலாவது - தேவப் பெயர்த் தொகுதி.
(இந்திரன்)
மருத நன்னிலத்து
வேந்தன் மருத்துவன் வானோர் கோமான்
புருகூதன் சசிமணாளன் புரோகிதன் கெளசிகன்னே
கரியவன் சுனாசீரன்னா கண்டலனுடன் வலாரி
அரி சதக்கிரது நீண்ட
வாயிரங்கண்ண னிந்திரன். (உ. 0)
(சூடாமணி நிகண்டு - முதலாவது - தேவப் பெயர்த் தொகுதி.)
ஆசிரியர் உரை:
மருத நிலத்து
வேந்தன் - மருத நிலத்து தலைவன்
மருத்துவன் - தேவர்களையுடையவன்
வானோர் கோமான் – தேவர்க்கு அரசன்
புருகூதன் – யாகத்தில்
அழைக்கப்படுபவன்
சசிமணாளன் –
இந்திராணிக்கு நாயகன்
புரோகிதன் - தேவகாரியங்களில் முன் வைக்கப்படுபவன்
கெளசிகன் – குசிகர்மரபிலுள்ளவன்,
கூகைவடிவங் கொண்டவன்
கரியவன் - கருநிறமுடையவன்
சுனாசீரன் – நல்ல
சேனைகளுடையவன்
மேலும் சூடாமணி நிகண்டு - இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதியில் உள்ள செய்யுள் -120 சோழ
மன்னனை பற்றியது.
நேரியன் சென்னி பொன்னித் துறைவனே நேரி வெற்பன்
ஆரின் மாலையனே கிள்ளி
யபயனே கோழிவேந்தன்
சீரியவளவன் மிக்க செம்பியன் புலி
யுயர்த்தோன்
சூரியன் புனனாடன் கோச் சோழன் மாலென்றுஞ் சொல்லும்
(சூடாமணி நிகண்டு - இரண்டாவது - மக்கட் பெயர்த் தொகுதி)
ஆசிரியர் உரை:
சோழன் - சோழர் குடியினர்
நேரியன் - நேரிமைலையை
உடையவன்,
சென்னி – தலைமைச்
சிறப்பு உடையவன்,
பொன்னித்துறைவன் –
பொன்னி ஆற்றுத்துறையை உடையவன்,
ஆரின் மாலையன் – ஆத்தி
மாலையை அணிந்தவன்,
கிள்ளி – உழவுத்
தொழில் குடித்தலைவன்,
அபயன் – அச்சம்
இல்லாதவன்,
கோழிவேந்தன் –
உறையூரைத் தலைநகராகக் கொண்ட மன்னன்,
வளவன் - வயல்,
வளப்பமான நாட்டை உடையவன்
செம்பியன் – செம்பு
போன்ற கோட்டையை உடையவன்,
புலியுயர்த்தோன் –
புலிக்கொடியை உயர்த்தினவன்,
சூரியன் – கதிவன்
போன்ற சிறந்த குடியிற் பிறந்தவன்,
புனல் நாடன் – நீர்வளம்
பொருந்திய நாட்டை உடையவன்
மால் – பெருமை உடையவன்
கிள்ளி என்ற சோழ மன்னனை உரை ஆசிரியர் உழவுத்
தொழில் குடித்தலைவன் என்று
கூறியிருப்பது சிறப்புக்குறியது.
சூடாமணி நிகண்டு - இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதியில் உள்ள செய்யுள் -122 குறுநில
மன்னர், அமைச்சர் பற்றியது.
குறும்பரே யரட்டர் வேளிர் குறுநிலமன்ன ராகுஞ்
செறிந்திடும் புரோச ரும்பேர்
தேர்ச்சியிற்றுனை வாரெண்ணர்
உறைந்திடு நூலோர் சூழ்வோ ருழையர் மந்திரரே
நீதி
அறிந்திடு முதுவர் முன்னேர மாத்தி யாமைச்சர் நாமம்.
(சூடாமணி நிகண்டு - இரண்டாவது - மக்கட் பெயர்த் தொகுதி)
ஆசிரியர் உரை:
குறுநிலமன்னர் –
சிறியதளவே நில ஆட்சிகொண்ட மன்னர்
குறும்பர் – சிறு
சிறு பூசல் செய்பவர்,
அரட்டர் – சிறு
சிறு அச்சுறுத்தல் தருபவர்,
வேளிர் – வேளாளர்
வழி வந்தவர்,
புரோசர் – மிக
திறமை உடையவர்
அமைச்சர் – அரசின்
அமைவுகளை நடத்துபவர்
உழையர் – மன்னனுக்கு
அணுக்கமாயிருப்பவர்,
முன்னோர் - மன்னனால்
ஆட்சி முன்னவராக அமைக்கப்படுபவர்,
அமாத்தியர் - மன்னனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்
இச்செய்யுலுக்கு உரைகண்ட ஆசிரியர்
வேளிர் என்பவர் வேளாளர்
வழி வந்தவர் என்று கூறியிருப்பது
கவணிக்கத்தக்கது.
அதே சூடாமணி நிகண்டு இரண்டாவது
- மக்கட் பெயர்த் தொகுதி - ல் , அன்றைய காலத்தில் ஒவ்வொரு நிலத்திலும் (திணையில்)
வாழ்ந்த மக்கள் யார்? என குறிப்பிடுகிறது.
அப்பாடல்கள் வறுமாறு.
1.குறவர் கானவரே மள்ளர்
குன்றவர் புனவரோடும்
இறவுளர் குறிஞ்சி தன்னிலின் புறுமாக்கள்
பேரே
குறியறி குறத்தி மற்றைக் கொடிச்சி
பெண்ணிறைவன்றானே
திறன் மிகு மலையன் வெற்பன் சில்ம்பன் கானக
நாடன் பேர்.
(சூடாமணி நிகண்டு
- இரண்டாவது - மக்கட் பெயர்த் தொகுதி)
ஆசிரியர் உரை:
குறிஞ்சி நில மாக்கள் பெயர் : குறவர், கானவர், மள்ளர், குன்றவர்,
புனவர், இறவுளர்.
குறிஞ்சி நிலப் பெண் பெயர்: குறத்தி, கொடிச்சி.
குறிஞ்சி நிலத் தலைவன் பெயர்: மலையன், வெற்பன், சிலம்பன், கானகநாடன்
2.வயவனேதிறலோன்மற்றைவண்டனேமிண்டன் மள்ளன்
வியவனே விறலோன் மீளிவீரனே திண்ணியன் பேர்
நயமில்கூளிய ரேறாளர் நாட்டும் வாளுழவர் மள்ளர்
சயமிகுமறவர் தானைத்தலைவராம் படரு மாமே.
(சூடாமணி நிகண்டு - இரண்டாவது - மக்கட் பெயர்த் தொகுதி)
ஆசிரியர் உரை:
திண்ணியன் பெயர்: வயவன், திறலோன், வண்டன், மிண்டன், மள்ளன், வியவன், விறலோன், மீளி, வீரன்.
தானத்தலைவர்பெயர்: கூளியர், எறாளர், வாளுழவர், மள்ளர், மறவர், படர்.
3.களமரே
தொழுவர் மள்ளர் கம்பள ருழவரோடு
விளைஞரே கடைஞ
ரேழ்பேர் விளைவுறு மருதமாக்கள்
அளவறு கடைச்சி மற்றை யாற்றுக்காலாட்டி
பெண்பேர்
உள மகிழ் மகிழ்நனூரன் கிழவனுந் தலைவனுமே.
(சூடாமணி
நிகண்டு - இரண்டாவது - மக்கட் பெயர்த் தொகுதி)
ஆசிரியர் உரை:
மருதநிலமாக்கள்பெயர்: களமர், தொழுவர், மள்ளர், கம்பளர்,
உழவர், விளைஞர், கடைஞர்.
மருதநிலப்பெண்பெயர்: கடைச்சி, ஆற்றுக்காலாட்டி,
மருதநிலத்தலைவன்பெயர்: மகிழ்நன், ஊரன், கிழவன்.
இவ்வாறு சூடாமணி நிகண்டு மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர் என மிக தெளிவாக குறிப்பிடுகிறது. இதற்க்கு மேலும் மள்ளர் யார்? என விளக்கம் கேட்டால், அவர்களின் அறியாமையை நினைத்து
நாம் வேதனைப்படத் தேவையில்லை என நினைக்கிறேன்.
அன்னியர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த கி.பி. 16
- ஆம்நூற்றாண்டிற்க்குப் பின்
எழுதப்பட்ட நிகண்டுகள் மள்ளர்கள் மருத நிலத்திலும், குறிஞ்சியிலும் இருந்தார்கள் என குறிப்பிடுகிறது. ஆனால்
மூவேந்தர்கள் ஆட்சி செய்த கி.பி. 9, மற்றும் 10 - ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர,
மற்றும் பிங்கள நிகண்டுகள் மள்ளர்கள் மருத நிலத்தில்
மட்டும் இருந்ததாக குறிப்பிடுகிறது. அந்த 6 நூற்றாண்டுகளில் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்தது என்பதை
முறையாக ஆய்வு செய்தால், கி.பி. 16 - ஆம்
நூற்றாண்டிற்க்குப் பின் மள்ளர்கள் ஏன் மருதத்திலும்,
குறிஞ்சியிலும் வாழும் நிலை ஏற்ப்பட்டது என்பதை தெளிவாக
புரிந்துகொள்ளலாம்.
வரலாற்றுச் சான்று :1
கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மதுரையை முகமதியத் தலைவன் ஜமாலுதீன்
கைப்பற்றியதன் விளைவாய்ப் பாண்டியர் மதுரையைக் கைவிட்டு வெளியேற வேண்டிய நிலை
எழுந்தது. துருக்கர் மதுரையில் 40 ஆண்டுகள் ஆட்சி
நடத்தினர்.
கி.பி. 14 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் விசயநகர அரசின் படைத்தலைவர்களில் ஒருவனாகிய
குமாரகம்பண்ணன் பாண்டியர் உதவியுடன் மதுரை வந்து
துருக்கருடன் பொருதி அவரைத் துரத்தி விட்டான். ஆனால்
குமார கம்பண்ணன் ஆட்சியைப் பாண்டியரிடம் ஒப்படைக்காமல் அதைத் தானே வைத்துக் கொண்டு மதுரையில் இருந்து ஆட்சி புரிந்தான். குமாரகம்பண்ணனுக்குப் பின்
அவன் மகனும், அதன் பின்னர் அவனது (குமாரகம்பண்ணன்)
மருமகனும் ஆட்சி செய்தனர். அதன் பிறகு இலக்கண நாயக்கரும், மதன நாயக்கரும் மதுரைப் பகுதியை ஆண்டனர்.
கி.பி. 15 நூற்றாண்டில் தமிழகத்தில் செஞ்சி, தஞ்சை மதுரை முதலிய
இடங்களில் விசய நகர அரசுப் பிரதிநிதிகளாய் இருந்த தெலுங்கு நாயக்கர் தன்னுரிமை
பெற்றனர். இக்காலத்தில் தெலுங்கர் பெருவாரியாகத் தமிழகத்தில் குடியேற்றப்பட்டு
அரசு பதவிகளில் அமர்த்தப் பட்டிருக்கின்றனர். மதுரையைவிட்டுத் தெற்கே சென்ற பாண்டியர்
கொற்கை, திருநெல்வேலி, தென்காசி, கரிவலம் வந்த நல்லூர் முதலிய இடங்களிலிருந்து ஆட்சிசெய்து
வந்திருக்கின்றனர். நாயக்கர் ஆட்சியை எதிர்த்துத் தமிழ் மன்னர் குறிப்பாகப்
பாண்டியர் பல போர்கள் நடத்தியிருக்கின்றனர்.
தென்பாண்டி நாட்டில் பாண்டியர் தெலுங்கரை
நீண்டகாலம் எதிர்த்து வந்துள்ளனர். கயத்தாற்றில் பஞ்ச பாண்டியராகிய ஐவர்
இராசாக்களுக்கும், நாயக்கருக்கும் இடையே
நீண்ட காலம் போர் நடந்திருக்கின்றது. பஞ்சபாண்டியர் படையை எதிர்க்க நாயக்கர்
தரப்பில் அரியநாதன் படைத்தளபதியாக அனுப்பப்பட்டான். பஞ்சபாண்டியரோடு நடத்திய
போரில் அவன் (அரியநாதன்) வெற்றிபெறமுடியாது போய்விட்டதால், விசுவநாத நாயக்கன் தனது தலைமையில் புதுப்படையுடன் வந்து பஞ்சபாண்டியரை
எதிர்க்க முற்பட்டான். பஞ்சபாண்டியர் படை வலிமையுடையதாய் இருந்ததால் நேருக்குநேர்
போரிட்டு வெற்றி காண முடியாது என நினைத்த விசுவநாதன் அதைக் சூழ்ச்சி மூலம் வெல்லத்
திட்டமிட்டான். நாயக்கர், பாண்டியர் இருவர் படைகளும்
பொருதினால் இருதரப்பிற்கும் ஏராளமாய் ஆள்சேதம் ஏற்பட நேரிடுமென்றும், அதனால் இருபடைகளும் நேருக்கு நேர் மோதாமல் இருதரப்பிலும் ஒருவர் மட்டும்
போரிடலாமென்றும், அப்போரில் இருதரப்பில் யார் வெற்றி
பெற்றாலும் அதை அத்தரப்பு வெற்றியாக ஏற்றுக்கொண்டு, படைகளைக்
கலைத்துவிட்டுப் போரை நிறுத்திவிட வேண்டுமென்று விசுவநாதநாயக்கன் ஒரு
ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்தான். இத்திட்டத்திற்குப் பஞ்சபாண்டியரும் ஒப்புக்
கொண்டனர். நாயக்கர் தரப்பில் விசுவநாத நாயக்கனே போரிட முன்வந்தான். பஞ்சபாண்டியர் தரப்பில் வீமன் பாண்டியன் (திதியன் மல்லன்) முன்வந்தான். இருவருக்கும்
இடையே கடுமையான போர் நடந்தது. இதில் விசுவநாத நாயக்கன் பலத்த காயம் அடைந்து கீழே
விழுந்தான். அவன் தரையில் குற்றுயிராய்க் கிடப்பதைப் போல் பாசாங்கு செய்ய, வீமன்பாண்டியன் குற்றுயிராய்க் கிடக்கும் எதிரியைத் தாக்குவது போர்
மறத்திற்குப் புறம்பானது என்று கருதி வாளாமல் நிற்கும்போது, விசுவநாத நாயக்கன் திடீரென எழுந்து தனது ஈட்டியால் வீமன்பாண்டியன்
வயிற்றில் குத்தினான். எதிர்பாராத நேரத்தில் விசுவநாதன் தாக்கியதால் வீமன்
பாண்டியன் குடல் சரிந்து கீழே விழுந்து உயிர்
நீத்தான்.
இதனால் பாண்டியநாடு விசயநகர வடுகளிடம்
அடிமைப்பட்டது. சீரழிந்தது பேரொழிந்தது. திதியன் மல்லனின் இந்தக் கதையை வாய்
கடுக்கப் பாடிப் புலம்புவதையன்றி வேறு வழி தெரியாத மள்ளர்கள், அழுது குரலெடுத்துப் பாடியே ஒய்ந்தனர். அதன்
பிறகு மள்ளர்கள் கயத்தாறு போன்ற பகுதியிலிருந்து வெளியேறி மேற்க்கு நோக்கி சென்று மலையிலும் மலை சார்ந்த பகுதியிலும் கூடியேரினர்.
கயத்தாரில் நடந்த இப்போர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தலப்புராணத்திலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சான்று :2
போத்தநாயக்கனூர் சமீன் கிருட்டினப்ப நாயக்கன் படைக்கும், அரசன்
குடும்பனார் மாப்பிள்ளையான அழகப்பக்
காலாடி படைக்கும் போர்
நடந்தது. தன் தங்கை மடிந்ததைக் கேட்டு அண்ணன்மார்கள்
வெகுண்டனர். வடுக நாயக்கனின் அரண்மனைக்குள் புகுந்து அதைத் தீக்கிரையாக்கினர்.
ஆயிரம் பேரைக் கொண்ட தம் மள்ளர்குலம் வடுகனோடு நடந்த சண்டையில் அழகப்பக் காலாடியின் படை தோல்வியுற்றது. மேலும்
செல்லாயின் அண்ணன்மார்கள் செல்லப்பன்
காலாடி, செம்புறைக் காலாடி, சோலைமலைக் காலாடி, சுந்தரம் காலாடி, சந்தனக் காலாடி, சங்கரன் காலாடி, ஆகிய அந்த அறுவரும் இறந்தனர். அதை எண்ணி நொந்து வருந்தி, எஞ்சிய மள்ளரெல்லாம்
ஊரைவிட்டே வெளியேறினர். சின்னதேவி குளத்துக்கு அருகில் புதிதாக ஒரு சிற்றுரை
அமைத்து வாழத் தலைப்பட்டனர். கன்னித் தெய்வமான செல்லாயிக்குக் கோயில் கட்டி
வழிபடலாயினர்.
வரலாற்றுச் சான்று : 3
சின்னதேவி குளத்தில் சங்கிலிக்
கிழானும் அவன் மகனான அரசக் கிழானும் குடியிருந்தநர். அரசக் கிழானின் வளம்
கொழிக்கும் காணியை பொம்மி நாயக்கன் என்னும் வடுகன்
அபகரிக்க நினைத்தான். அரசக் கிழானை அழைத்துத் தன்
காணியைத் தனக்குத் தந்துவிட்டால், பொன்னும் பொருளும்
அள்ளியள்ளி வழங்குவதாகவும், வேறு காணியை மாற்றாகத்
தருவதாகவும் ஆசை காட்டினான். அரசக் கிழான் அதற்க்கு உடன்பட மறுத்துவிட்டான்.
ஆதலால் அரசக் கிழானின் காணி அரண்மனைக் கோயிலுக்கே
சொந்தமானது என
முரசறைவித்தான் பொம்மு நாயக்கன். இதனால், அவனுக்கு
அடியாளாயிருந்த வீரப்ப கிழானும் வெகுண்டான். அவன் தேவி குளக்கரை வழியில் பொம்மு
நாயக்கன் நடந்து போகையில், அந்த வடுகனையும் சேர்த்துக்
காவலுக்கு வந்த அவனது அடியாட்கள் பிறரையும் வெட்டிப் போட்டான்.
வீரப்ப கிழான் வடுக சமீனுக்கு வெட்டி வேலை செய்யும் கொடிய வழக்கத்தை ஒழிக்கப்
பாடாற்றினான். அழகான பெண்டிரை அந்தப்புரத்துக்கு அழைத்துக் கெடுக்கும் வடுகக்
கொடுமையை ஒழித்தான். கோயில் தேரிழுக்கும் உரிமை ஐந்தூர் குடும்பருக்கும்
வேண்டுமெனக் கேட்டான். இந்நிலையில், வீரப்ப
கிழானின் புரட்சிக் கலகத்தை வடுகரெல்லாம் கூடித் திட்டமிட்டு, அந்த வீரப்ப கிழான் செல்லாயி அம்மன் கோயிலில் அயர்ந்து உறங்கும் வேளை
பார்த்து அவன் கழுத்தை அறுத்துக் கொன்றனர். வீரப்ப
கிழான் கொல்லப்பட்ட செய்தி கேட்டு, ஐந்தூர், மள்ளர்கள் திரண்டு வடுகன் பங்காரு நாயக்கனின், அரண்மனையைத்
தீய்க்கு இரையாக்கினர். அவனையும்
அத்தீயில் சுட்டுப் பொசுக்கினர். வீரப்ப கிழான், நடுகல்லானான்.
அதன் விளைவாக மள்ளர்கள் அவ்வூரைவிட்டு வெளியேறி வேறு
பகுதியில் குடியேறினர்.
வரலாற்றுச் சான்று : 4
புளியங்குளத்தை அடுத்திருந்த பாண்டியபுரத்து நிலக்கிழான்
தலைக்குடும்பன் குப்பாண்டியன் மற்றும் அவன்கீழ் அணிவகுத்தத மள்ளர் படைக்கும், கன்னட
வடுகன் கெம்ப நாயக்கன் படைக்கும் நடந்த சண்டையில் கெம்பண்ணனைக் கொன்று பழி தீர்த்தனர். மாமன் என்றும் மச்சான் என்றும் அந்த
வடுகனுடன் உறவு கொண்டாடிவந்த சேற்றூர் பாளையக்காரன் அவனுக்கு உதவப் பெரும் படையோடு
வந்தான். மறவனின் சேற்றுர் பாளையப் படைகளோடு எட்டு நாட்கள் போரிட்டது மள்ளர் படை. இறுதியில், மள்ளரில் பெரும்பாலோர் மடிந்தனர்.
அவ்வூரில் இனி மள்ளர் வாழ வழியில்லை
என்றுணர்ந்தனர். ஊரைவிட்டு வெளியேறியவர்களில் சிலர் முத்துலிங்கபுரத்தை
நோக்கி நடைகட்டினர். ஒரு புதிய ஊரைக் கட்டி யெழுப்பி அங்கு தீ புகுந்து மடிந்த
செல்லாயியை அம்மனாக்கிக் கோயில் கட்டினர். சிலர்
அங்கிருந்து இடம்பெயர்ந்து மலைப் பகுதிகளுக்கும் சென்றனர்.
இவ்வாறு கி.பி. 16
– ஆம் நூற்றாண்டில் அன்னியர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில்
பெருவாரியான மள்ளர்கள் மருதநிலத்தை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். மூவேந்தர்
படை தளபதிகளும், உப தளபதிகளும் மண்ணில்
மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்ததால் தங்களை காத்து
கொள்ள மலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
அவ்வாறு குடியேரியவர்களில் பலர் அட்டப் பாறை மலைப்பகுதில் குடியேரினார்கள்.
அந்த போர் குடி மக்களே இருளப்பள்ளர் ஆவார். அவர்களின் சந்ததிகள் இன்றும்
அப்பகுதியில் ( தமிழ்நாடு , கேரளா ) வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் தங்களை இருளப்பள்ளர்,
பள்ளி, பள்ளியர்,குடும்பி, மள்ளன் என்றும்
அழைத்துக்கொள்கிறார்கள். தன் தலைவர் மூப்பர் நினைவாக இருளப்பள்ளர் வாழும் செம்மள்ணூர் அட்டப்பாடி கிராமத்தில் மல்லீஸ்வரர் ஆலயம் கட்டி வழிபடுகின்றனர்.
முகமதிய படைகளை எதிர்த்து போராடிய மள்ளர்
தளபதிகள், உபதளபதிகளில் குடும்பங்கள், காடுகளில்
பதுங்கி வாழ நேர்ந்தது. அடர்ந்த இருள் சூழ்ந்த
காடுகளுக்குள் பதுங்கி வாழ நேர்ந்த போது இருளர் என்ற
பெயர் வந்திருக்கலாம். பின்னர் தெலுங்கு விஜயநகர பேரரசின் படைகளையும் எதிர்த்து
மள்ளர் படை போராடி மீண்டும் வீழ்ந்த போது மேலும் அடர்ந்த காடுகள் படர்ந்திருந்த
மலைப்பகுதிகளை நோக்கி மேலும் நகர நேர்ந்தது.
தளபதிகள் மீண்டும் தனது மள்ளர்
சமூகத்தவரை அணுக முடியாத அளவுக்கு தெலுங்கர்களும், அவர்களுக்கு விசுவாசியாக விஜய நகர படைகளுக்கு
துணை போன தமிழின எதிர்ப்பு சமூகங்களும் மேற்கு மலைத் தொடர் கிராமங்களில் தங்களின்
குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டனர். இவர்களின்
பாதுகாப்பு வளையத்தை மீறி தனது மள்ளர்
மக்களுடன்(பண்ணாடி,மண்ணாடி) இருள பள்ளர்களுக்கு(போர் மள்ளர்கள்) எந்த தொடர்பும் வைக்க இயலாத நிலை ஏற்ப்பட்டது.
மறைந்து வாழ்ந்த மள்ளர்
தளபதிகளின் குடும்பங்கள் தங்களின் வரலாற்று
பின்னணியை மறந்ததோடு, மேற்கு
மலைத்தொடரின் பின்புறம் மலையாள நாடு இருப்பதால், தமிழ் தமிழ் மொழிகளின் கூட்டாக இருளர் மொழி படைத்து முற்றிலுமாக தங்களை
இருளர்கலாக, மலைவாழ் மக்களாக மாற்றிக் கொண்டு வாழ்க்கை வாழ நேர்ந்துள்ளது.
தங்களின் சைவ சமயத்தை மறக்க இயலாத இந்த
இருளப்பள்ளர் மக்களால் ஆறுமலைகளைக் கடந்து ஏழாவது மலையில் லிங்க வடிவில் சிவனை
வழிபாடும் கோவில் உருவாக்கப்பட்டது. இதுவே வெள்ளிங்கிரி
ஆண்டவர் மலைக்கோயில் வழிபாட்டு தலமாகியது.
மேலே கூறப்பட்ட வரலாற்று உண்மையை கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஆய்வு நூல் உறிதி செய்கிறது.
இருளப்பள்ளர்கள் யார்?
அட்டப்பாடி பகுதி இருளர்கள் (இருளப்பள்ளர்கள்) கோவை மாவட்டத்திலிருந்து குடியேறியவர்கள் என்ற கூற்றைக் கேரள
மாநில மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் கேரளப்
பழங்குடி ஊர்களின் ஆய்வு நூலில் கூறியுள்ளார்.
அட்டப்பாடி இருளர்கள் கோவை மாவட்டத்தில்
இருத்தவர்கள். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினேழாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் குடி யேறியதாக வரலாறு கூறுகிறது. விஜயநகரப்
போரினால் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்தும் மனித
உயிர்களுக்குப் போதிய பாதுகாப்பு இன்மையாலும், இவர்கள்
கோவையிலிருந்து அட்டப்பாடிக்குக் குடியேறினார்கள் என்று கூறப்படும் காரணம் ஏற்றுக்
கொள்ளத் தக்கதாகவே உள்ளது. இருளர்களுடைய முன்னோர்கள்
தாங்கள் தொடக்கத்தில் வாழ்ந்த இடத்திலிருந்து பகைவர்களால் பலவந்தமாகத் துரத்தி
அடிக்கப்பட்டார்கள் என்று கூறுகின்றனர்.
போரின்போது கொள்ளைக்கும் படுகொலைக்கும் ஆளானார்கள். தாங்கள் வாழ்ந்த
இடத்தைவிட்டுக் காடுகளும் வனவிலங்குகளும் நிறைந்த அட்டப்பாடி குன்றுகளைத் தங்கள்
புகலிடமாகக் கொண்டனர் இருளர். இவர்கள் குடியேறிய
காட்டுப் பகுதிக்குள் நுழைவது அத்துணை எளியது அல்ல.
ஆதலால் அவர்களுக்கு ஆபத்து இல்லை. செவிவழிச்
செய்தியாகக் கூடத் தங்கள் பழைய கொடூரமான வரலாற்றையும் போரினால் விளைந்த நாசங்களையும் இன்றைய இருளர்கள் அரிதாகவே அறிந்துள்ளனர்.
ஆயினும் போரின் விளைவால் நிகழ்த்த மனமாற்றங்களையும் புறவாழ்க்கையில் நிகழ்ந்த மாறுதல்களால் ஏற்றுக் கொண்ட பண்பாட்டுக் கூறுகளையும் இன்றும்
காணலாம்.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொடூரமான
போரின்போது பகைவர்கள் படு தோல்வியைபும் பெரும் இன்னல்களையும் மக்களுக்கு விளைவித்தனர். எதிரிகளை அடியோடு துடைத்து
எறிவதற்குப் பகைவர்கள் கிணறுகளிலும், குளம் குட்டைகளிலும் நஞ்சைக்கலந்து பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். தங்கள் உயிர்களுக்கும், தங்கள் நெருங்கிய உற்றார் உறவினரின் உயிர்களுக்கும் இதன் விளைவாக நேர்ந்த
முடிவைக் கண்டு அஞ்சி நடுங்கிய இருளர்கள், வேறு
வழியில்லாமல் பின்வாங்கிப் படிப்படியாக அடர்ந்த காடுகள் நிறைந்த அட்டப்பாடியில்
வந்து குடியேறினார்கள். யாராலும் அணுக முடியாத காட்டுப்பகுதியில் வந்து குடி யேறிய
போதிலும் பகைவர்களின் செயல்கள் அவர்கள் நெஞ்சில் அச்சத்தை உண்டாக்கிக்
கொண்டிருந்ததால் இன்றும் அவர்கள் தேங்கிய
நீரைப் பருகுவதை விரும்புவதில்லை. அதன்
பின்னர், ஆட்டப்பாடியில் நீரோட்டமுள்ள நதிகளிலிருந்தும், கால்வாய்களிலிருந்தும்
மட்டுமே இருளர்கள் நீரை அருந்துவது வழக்கமாயிற்று. இத்தக் கட்டுப்பாடு நிலைத்து
நிற்கத் தொடங்கியது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் கடுமையாகவும்
அனுசரிக்கப்பட்டது. அதன் விளைவாகத் தேங்கிய நீரைக் குடிப்பது ஒரு செய்யக் கூடாத
தவறாக (Taboo) அமைந்தது.
( நா. வானமாமலை -
மக்களும் மரபுகளும் - மானிடவியல் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு)
இவ்வாறு மலைப்பகுதியில் வாழும் தேவேந்திர குல
மள்ளர்களின் கிளை குடியினர்க்கு தமிழ்நாடு அரசு பள்ளியன், பள்ளியர் என்று சாதி சான்றிதல் வழங்கியுள்ளன.
ST Communities List
35
Palliyan
36
Palliyar
இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்டதுதான் சூடாமணி
நிகண்டு. அன்றைய சூழலில் மள்ளர்கள்
மருதநிலத்திலும், குறிஞ்சியிலும் இருந்தார்கள்
என்று எழுதியதில் தவறு ஒன்றும் இல்லை.